/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--ராஜபாளையத்தில் சித்திரை திருவிழா --
/
--ராஜபாளையத்தில் சித்திரை திருவிழா --
ADDED : ஏப் 15, 2025 05:20 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
* ராஜபாளையம் பழையபாளையம் ராஜூக்கள் சார்பில் காலை 7:30 மணிக்கு மாயூரநாத சுவாமி கோயிலில் இருந்து நீர் காத்த அய்யனார் சுவாமி அலங்கரிக்கப்பட்ட யானை வாகன ஊர்வலம் நடந்தது. சாவடி தலைவர் பிரகாஷ் ராஜா, சித்திரை விழா கமிட்டி தலைவர் முருக ராஜா தலைமை வகித்தனர்.
ஊர்வலம் பஞ்சு மார்க்கெட் பழைய பஸ் ஸ்டாண்ட் முடங்கியார் ரோடு வழியாக என்.ஆர். கே மண்டபம் அடைந்தது. மாலையில் பூஜைக்கு பின் சுவாமி பெரிய சாவடி முன்பு வான வேடிக்கையுடன் நகர்வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தார்.
* ராஜபாளையம் தேவேந்திர குல வேளாளர் சார்பில் வெண்குடை திருவிழா நடந்தது. காலை 8:00 மணிக்கு சீனிவாசன் புது தெரு சாவடி தலைமையில் ஆனையூர் தெரு, அம்மன் பொட்டல் மத்திய வடக்கு தெரு சார்பில் ஊர்வலம் நடந்தது. நீர் காத்தலிங்கம் அய்யனார் சுவாமியுடன் செம்புலி சித்தன் அதிவீர ராஜ் வெண்குடை ஏந்தியும் வலது காலில் வெண்டை அணிந்து ஊர்வலம் ஏழு தெருக்கள் சுற்றி மேற்கு தொடர்ச்சி மலைவாரம் உள்ள அய்யனார் கோயில் சென்று மாலையில் பெரிய கடை பஜார் வழியாக சீனிவாசன் புது தெரு சாவடி அடைந்தது.
இரண்டு சமூகத்தினரின் விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த உறவினர்கள் உள்ளூர் மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.