ADDED : டிச 09, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனி குரு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆண்டு விழா நடந்தது. கல்வி குழும தாளாளர் பழனிகுரு குத்து விளக்கேற்றி தொடங்கினார். ஆறுமுக குரூப் சேர்மன் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
கணினி துறை தலைவர் அனிதா வரவேற்றார். பிரீமியர் குழும சேர்மன் ராஜேந்திர மணி, ஜனனி குழும மேனேஜிங் டைரக்டர் ராமநாதன், துணைத் தலைவர் விமல் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்தி பேசினர். கல்லூரி முதல்வர் நாகலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார்.
பல்கலை தர வரிசை, அதிக மதிப்பெண், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கலை நிகழ்ச்சி நடந்தது. இயற்பியல் துறை தலைவர் ராமுத்தாய் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆலோசகர் சித்ராதேவி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.