/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
-ஆரம்ப சுகாதார நிலைய கூரை சேதம்
/
-ஆரம்ப சுகாதார நிலைய கூரை சேதம்
ADDED : ஏப் 18, 2024 04:59 AM

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. நோயாளிகள் இல்லாததால் காயம் இன்றி தப்பியுள்ளனர்.
சத்திரப்பட்டி அடுத்த கிழவி குளம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. பிரதான கட்டடம் 30 ஆண்டுகளை கடந்ததால் அருகிலேயே புதிய கட்டடம் கட்டி பழைய கட்டடம் அகற்றாமல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக பழைய கட்டடத்தை டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். முன்பகுதி தாழ்வாரம் ஏற்கனவே உடைந்த நிலையில் நேற்று மதியம் டாக்டர்கள் ராஜலட்சுமி, பாரதி மாரீஸ்வரன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
உணவு நேரமானதால் வெளி நோயாளிகள் பிரிவு கூட்டம் குறைந்தது.
திடீரென மருந்தாளுநர் மகாலிங்கம் இருந்த அறையின் கூரை உடைந்து விழுந்தது. அறையின் ஓரம் பணியில் இருந்ததால் விபத்தில் சிக்காமல் தப்பினார். பணியில் இருந்த டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறினர். சேதமடைந்த நிலையில் உள்ள கட்டடத்தை விரைவில் அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

