/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
-தோப்புகளில் யானைகள் புகுந்து சேதம்
/
-தோப்புகளில் யானைகள் புகுந்து சேதம்
ADDED : மார் 04, 2025 06:46 AM

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் யானை புகுந்து தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. விளை நிலங்களுக்குள் நுழையாமல் தடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அய்யனார் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் புல் பத்தி மலை அமைந்துள்ளது. இதன் அருகே நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா, வாழை, பலா உள்ளிட்ட சாகுபடி நடைபெறுகிறது.
ராஜபாளையத்தை சேர்ந்த அழகேந்திரன், முருகராஜ் ராமசுப்பு, திருப்பதி ராஜா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டோரது தோப்புகளில் கூட்டமாக வரும் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.
புல் பத்தி மலை அருகே முகாமிட்டு அனுமன் கோயில் வரை தோப்புகளில் புகுந்து பெரிய தென்னை மரங்களை சாய்த்தும் 60 க்கும் அதிகமான இளம் தென்னங்கன்றுகளின் குருத்துகளை பிடுங்கியும் உள்ளன. அத்துடன் வாழை, மா மரங்களையும், மின்வேலி, தண்ணீர் குழாய்களையும் உடைத்துள்ளது.
இது குறித்து விவசாயி அழகேந்திரன்: 28 ஆண்டுகளாக யானை இங்கு நுழைந்ததில்லை. ஓடை வழியாக நுழைந்து மின்வேலியையும் உடைத்து ஆண்டு கணக்கில் பாதுகாத்து வளர்த்த மரங்களை ஒரே இரவில் சேதப்படுத்தியதால் பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மா மர சீசன் தொடங்க உள்ள நிலையில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.