/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும் பழைய முறையில் விநியோகத்தால் வருவாய் இழப்பு
/
தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும் பழைய முறையில் விநியோகத்தால் வருவாய் இழப்பு
தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும் பழைய முறையில் விநியோகத்தால் வருவாய் இழப்பு
தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும் பழைய முறையில் விநியோகத்தால் வருவாய் இழப்பு
ADDED : மே 07, 2025 01:35 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி பகுதி தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்தும் பழைய இணைப்பிலேயே குடிநீர் விநியோகம் செய்வதால் புதிய வரிவசூல் ,தண்ணீர் திருட்டு போன்றவற்றால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மாவட்டத்திலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள ராஜபாளையம் நகராட்சிக்கு குடிநீர் தங்கு தடை இன்றி வினியோகம் செய்ய ரூ.197.79 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது.
ஏற்கனவே ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோயில் பகுதியிலிருந்து 6வது மைல் பகுதியில் இரண்டு நீர்த்தேக்கங்கள் மூலம் 28 ஆயிரம் இணைப்புகளுக்கு நபருக்கு 60 லிட்டர் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
தற்போது புதிதாக 10 ஆயிரம் இணைப்புகள் என 38,800 இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் 6வது மைல் தேக்க குடிநீரும், தாமிரபரணி குடிநீர் கலந்து பழைய இணைப்புகள் வழியே விநியோகிக்கப்படுகிறது.
குடிநீர் வடிகால் அதிகாரிகள்: குடிநீர் விநியோகத்திற்கு நகராட்சி 18 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் சோதனை முழுமை அடைந்த நிலையில் 7 மண்டலங்கள் டிச. ல் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
வரி உயர்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கவுன்சில் கூட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முழுவதும் ஒப்படைக்கப்படும் சூழலில் புதிய வரி நிர்ணயம் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதால் பழைய குழாய்கள் வழியே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு உயர்த்தப்பட்ட வரியை வசூலிக்க முடியாமல் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
விரைந்து முழு அளவில் குடிநீர் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

