/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊருணியால் அச்சம் சுற்றுச்சுவர் எதிர்பார்ப்பு
/
ஊருணியால் அச்சம் சுற்றுச்சுவர் எதிர்பார்ப்பு
ADDED : மார் 28, 2024 05:39 AM

காரியாபட்டி: தண்டியனேந்தல் பள்ளி அருகே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஊருணியால் விபத்து அச்சம் உள்ளது. சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டி தண்டியனேந்தல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள பால்வாடி, நடுநிலைப் பள்ளிக்கு அருகில் ஆழமான ஊருணி சுற்றுச்சுவர் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இப்பள்ளிகளில் 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்கள் விளையாட்டுப் போக்கில் இறங்கி ஊருணியில் தவறி விழும் அபாயம் இருக்கிறது. ஏற்கனவே குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் வரை நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
ஊருணி அருகே நடந்து செல்லும் போது அச்சத்துடன் செல்கின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுச் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.