ADDED : பிப் 25, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சிவகாசி பஸ் ஸ்டாண்ட், சிவன் கோயில் அருகே, சித்துராஜபுரம் ரிசர்வ் லைன் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெ.,யின் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. சாட்சியாபுரத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பகுதி செயலாளர் சரவணக்குமார், நிர்வாகிகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

