நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம்: மாவட்ட கைத்தறி துறை சார்பில் 10வது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு தளவாய்புரம் அருகே புனல் வேலியில் நெசவாளர்களுக்கான மருத்துவ முகாம், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குனர் வெங்கடேசலு, சுகாதாரத்துறை சார்பில் ஊரக வட்டார தலைமை மருத்துவர் அலெக்சாண்டர், மேற்பார்வையாளர் மாரிமுத்து பங்கேற்றனர்.
முகாமில் 626 நெசவாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நெசவாளர்களுக்கு மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்ட பணி ஆணை ஓய்வூதியம் உள்ளிட்ட 1கோடியே 89 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.