/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சிகளில் செயல்படும் நிறுவனங்களில் கண்காணிப்பு தேவை; கழிவு நீர், நச்சுப்புகையை வெளியேற்றுவதில்

ADDED : மார் 06, 2025 03:19 AM

விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியப்பட்டி, சிவகாசி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் சுற்றியயுள்ள ஊராட்சி பகுதிகளில் சிறு, குறு உணவுப்பொருள், பழரசம், பருப்பு தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை பெரும்பாலும் கண்மாய், கால்வாய்களுக்கு அருகே செயல்படுகிறது.
இந்த நிறுவனங்கள் கழிவு நீரை வளாகத்தில்சுத்திகரிப்பு செய்து, அதன் பின் வெளியேற்ற வேண்டும். ஆனால் நீர் நிலைகளுக்கு அருகாமையிலும், நீர்வழித்தடங்களுக்கு அருகே இருப்பதால் சுத்தம் செய்யாமல் கழிவு நீரை அப்படியே வெளியேற்றுகின்றன.
இப்படி வெளியேற்றப்படும் கழிவு நீர் வெயில் காலத்தில் வற்றி விடுகிறது. ஆனால் மழைக்காலத்தில் கண்மாய் நீருடன் கலந்து மாசடைகிறது. இக்கண்மாய்களில் குளிப்பவர்களுக்கு தோல் வியாதிகள் ஏற்பட்டும், விளை நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உண்டாகியுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, மண்வளம் பாதிக்கப்படுகிறது.
இந்நிறுவனங்கள் துவங்குவதற்காக ஒப்புதல்வாங்கும் போது கழிவுகளை முறையாக கையாளுதல் குறித்து தெரிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தற்போதும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனவா என அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்யாததால் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு செயல்படுகின்றன.
இங்கிருந்து வெளியேற்றப்படும் துர்நாற்றம் நிறைந்த காற்றை சுவாசிக்கும் மக்கள் சுவாசப்பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ஊராட்சிகளில் தொடர்ந்து கழிவுகளை சுத்தம் செய்யாமல் வெளியேற்றும் நிறுவனங்களை கண்காணித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.