/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--செயல்படாத சுகாதார வளாகம், கழிவு நீர் ஓடை ஆக்கிரமிப்பு
/
--செயல்படாத சுகாதார வளாகம், கழிவு நீர் ஓடை ஆக்கிரமிப்பு
--செயல்படாத சுகாதார வளாகம், கழிவு நீர் ஓடை ஆக்கிரமிப்பு
--செயல்படாத சுகாதார வளாகம், கழிவு நீர் ஓடை ஆக்கிரமிப்பு
ADDED : மார் 05, 2024 05:50 AM
தளவாய்புரம், : ராஜபாளையம் அருகே சோலைசேரியில் காட்சி பொருளாக உள்ள மகளிர் சுகாதார வளாகம், அடிப்படை வசதிகள் இல்லாத மயானம், கழிவு நீர் ஓடை ஆக்கிரமிப்பு உட்பட பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சோலைசேரி ஊராட்சியில் நாடார் வடக்கு தெரு, குட்டி தெரு, நாயக்கர் வடக்கு, தெற்கு தெரு, மாசாணம் கோயில் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, இந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளது.
ஊராட்சியில் இயங்கி வந்த ஒரே மகளிர் சுகாதார வளாகம் சேதமடைந்து செயல்படாமல் உள்ளது. புதிதாக அமைக்காததால் திறந்தவெளி அவலம் உள்ளது. குப்பையை வீடுகளில் வந்து வாங்கியும் விழிப்புணர்வு இல்லாமல் சிலர் ரோட்டோரம் கொட்டி செல்கின்றனர். ஊராட்சியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் தொட்டி, மண்புழு உரக்கூடம் செயல்படாமல் உள்ளதால் சுகாதாரப் பணியாளர்களே கண்மாய் ஓரம் கொட்டுகின்றனர்.
ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாமல் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் சப்ளைக்கு தோண்டிய பணி 70 சதவிகிதம் முடிந்து மீதம் உள்ளவை நடைபெறாததால் வாகனங்கள் தடுமாறுகின்றன.
இந்திரா காலனி அருகே சேரும் சோலைசேரி ஊராட்சியின் கழிவு நீர் வாய்க்காலோடு கிருஷ்ணாபுரம், சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சிகளின் கழிவுநீரும் இணைவதால் கால்வாயை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும். உரக்கிடங்கை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

