/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மோடி ஆட்சியை அகற்றினால் தான் விலைவாசி குறையும் *அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம்

ADDED : ஏப் 18, 2024 04:47 AM

அருப்புக்கோட்டை: மோடி ஆட்சியை அகற்றினால் தான் விலைவாசி குறையும்,என அருப்புக்கோட்டையில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.
அருப்புக்கோட்டையில் பாவடி தோப்பு, பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை, அகம்படியர் மஹால், சொக்கலிங்கபுரம், காந்தி நகர் பகுதியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், கை சின்னத்திற்கு ஓட்டு போட்டால் தான் விலைவாசி குறையும். மோடி ஆட்சியை அகற்றினால் தான் விலைவாசி குறையும். பத்து ஆண்டுகளாக அவர் ஆட்சியில் விலைவாசி கூடிக் கொண்டே தான் செல்கிறது. தப்பி தவறி அவர் ஜெயித்து விட்டால் மீண்டும் அதே கதை தான். விலைவாசி உயர்வு பெண்களுக்கு தான் அதிகம் தெரியும். சிலிண்டர் விலையும் கூடியுள்ளது.
இங்கு, எம்.எல்.ஏ., அமைச்சர், எம்.பி., யும் நானே. எனக்காக ஓட்டு போடுங்கள். 50 ஆண்டுகளாக உங்களுடன் நான் பயணித்து வருகிறேன். உங்களிடம் ஓட்டு கேட்க எனக்கு உரிமை உண்டு. உங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பேன். என்றார்.