/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மரங்களால் மனநிலையை மாற்றும் பசுஞ்சோலை குறுங்காடாக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி
/
மரங்களால் மனநிலையை மாற்றும் பசுஞ்சோலை குறுங்காடாக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி
மரங்களால் மனநிலையை மாற்றும் பசுஞ்சோலை குறுங்காடாக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி
மரங்களால் மனநிலையை மாற்றும் பசுஞ்சோலை குறுங்காடாக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி
ADDED : ஜூலை 14, 2025 02:40 AM

உயிர்களுக்கு பொதுவாக உள்ள பூமியில் மக்கள் தொகை அதிகரிக்கும் போது குடியிருப்புகள் அதனை ஒட்டிய வசதிகள் பெருக வேண்டி உள்ளதால்இயற்கைக்கு எதிராக மரங்களை வெட்ட வேண்டி உள்ளது. இம்மரங்களே மனிதனுக்கான ஆக்சிஜனை தருகின்றன.
தொடர்ந்து இயற்கைக்கு மீறி மரங்களை வெட்டி பசுமையை சிதைத்து வந்தாலும் சமீபமாக இதன் சமநிலையை அறிவியல் பூர்வமாக உணர்ந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பசுமையை பேணி காப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
குறிப்பிட்ட சிலர் மட்டும் இதில் எடுக்கும்அக்கறை முழுமை பெறாது எனும் நிலையில் பள்ளி கல்லுாரி மாணவர்கள் இடையே இதன் முக்கியத்துவத்தை கொண்டு செல்வதற்காக நேச்சர் கிளப் என்ற பெயரில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் இயற்கையை பாதுகாக்கும் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் இளம் பருவத்திலேயே நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கும்பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கிய அடிப்படையான மரங்களை வளர்த்து பாதுகாப்பதிலும் தங்கள் பங்களிப்பை பெரிதும் செய்து வருகிறது.
இதனால் கல்லுாரி வளாகம் பசுமையாக காட்சியளிப்பதுடன் அடர் வனங்களில் வளர்ந்து வரும் நெல்லி, பலா, கொய்யா, நாவல், கொடிக்காய் போன்ற பறவைகளுக்கான உணவு தேடலையும் பூர்த்தி செய்து வைத்துஉள்ளனர்.
குறிப்பாக பாம்புகளை கண்டதும் கொல்வது போன்ற அறியாமையை தெளிவுபடுத்துவதும் உணவு சங்கிலியில் அதன் முக்கியத்துவத்தையும் அவற்றின் இயல்புகளையும் மாணவர்களிடையே தெளிவுபடுத்துகின்றனர்.
சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும் மழை வளம் கிடைக்கவும் பெருகிவரும் ராஜபாளையம் மக்கள் பெருக்கத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை வளர்ப்பதுடன் இயக்கம் சார்பில் பாலிதீன் ஒழிப்பு, குறுங்காடு அமைப்பதில் மற்றவர்களுக்கு உதவி, பறவைகள் கணக்கிடுதல், நிலத்தடி நீரை பேணி காப்பதில் பங்கு என நேச்சர் கிளப் தன்னால் ஆன முக்கிய பங்கை வழங்கி வருகிறது.
இளம் தலைமுறைக்குஅவசியம்
ராமகிருஷ்ணன், முதல்வர்:பசுமையை பேணிக்காப்பதும், இயற்கையை சிதைக்காமல் வாழ்வது என்பது அறிவுரையாக மட்டும் பார்க்காமல் பட்டம் பெற்று வெளியே செல்லும் இளம் தலைமுறைக்கு பாடமாக கொண்டு செல்ல வேண்டிய அவசியம் கருதி இதனை ஊக்குவிக்கிறோம். ஒவ்வொரு மாணவர்களின் பங்களிப்பும் கல்லூரியுடன் முடியாமல் வாழும் காலம் வரை அனைவரிடமும் கொண்டு செல்வது அவசியம்.
ஆர்வத்திற்கு ஒத்துழைப்பு
பிரகாஷ், கல்லுாரி தலைவர்: கவலை மறந்து திரியும் பருவத்தில் இயற்கையை நேசிப்பதற்காக நேச்சர் கிளப் கல்லுாரியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊர்வன, பறப்பன போன்றவை பல்கி பெருக காரணமாகும் மரங்களை குறுங்காடுகளாகவும், அடர் வனமாகவும் வளாகத்தில் மாற்றி வைத்துள்ளோம். அரிதான மரங்களையும் பாதுகாத்து வளர்க்கிறோம். அவர்களின் ஆர்வத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.
மாநில அளவில் கிரீன் சாம்பியன் விருதும் பரிசு பணம் ரூ.1 லட்சம் வெகுமதியும், தேசிய அளவில் கேம்பஸ் லீவ்ஸ் என்று அதிக மர வகைகளை கண்டறிந்து கூறும் போட்டிகளிலும் மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர்.