ADDED : ஏப் 25, 2025 06:12 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
காலை 6:00 மணிக்கு அவரது நினைவிடத்தில் புஷ்பாஞ்சலி, கீர்த்தனாஞ்சலி நடந்தது. இதனைத் தொடர்ந்து சொக்கர் கோயிலில் நிறுவனரின் திரு உருவ படத்திற்கும் நினைவு ஜோதிக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. ராம்கோ சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா துவக்கி வைத்தார்.
சொக்கர் கோயிலில் தொடங்கிய ஜோதி ஓட்டம் தென்காசி மெயின் ரோடு வழியே ராம மந்திரம் வந்தடைந்து ஆர். ஆர் நகர் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் கொண்டு சென்றனர்.
நிகழ்ச்சியை ஒட்டி ராம்கோ சமூக சேவை கழகம் சார்பில் ரத்ததான முகாம், அன்னதானம் நடந்தது. நேற்று மாலை ராஜபாளையம் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் சந்தீப் நாராயணனின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ராம்கோ குழுமத்தினர் செய்திருந்தனர்.

