/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--சலானி ஜூவல்லரி தங்க வைர நகை கண்காட்சி
/
--சலானி ஜூவல்லரி தங்க வைர நகை கண்காட்சி
ADDED : ஜன 05, 2024 05:23 AM

ராஜபாளையம் ; ராஜபாளையத்தில் சலானி ஜுவல்லரி சார்பில் தங்கம், வைரம் நகைகளுக்கு மூன்று நாள் கண்காட்சி தென்காசி ரோடு அமிழ் ஹோட்டலில் நேற்று துவங்கியது.
ஆனந்தாஸ் ஓட்டல் உரிமையாளர் ஆனந்தி, அமிழ் ஓட்டல் வினோத் தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் மணமகள் திருமண நகைகள், தினமும் அணிய லைட் வெயிட் கலெக்சன், பாரம்பரியத்தை உணர்த்தும் ஆன்டிக் நகைகள், டைமண்ட் நகைகள், தெய்வீகமான டெம்பிள் நகைகள், வெள்ளி பாத்திரங்கள், விளக்குகள், அலங்காரப் பொருட்கள் என பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.
ரமணி, சோனா, வீணா, கீதா, ரேவதி மற்றும் நகர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
கண்காட்சியில் பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளலாம். ஜன. 7 வரை காலை 10:00 மணி முதல் இரவு 8:30 வரை நடைபெறும் என மதுரை கிளை மேலாளர் மீனா, மாதவன் தெரிவித்துள்ளனர்.