ADDED : மே 26, 2024 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டை உள்ள ஜவுளிக்கடைகள், பல சரக்கு கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், பூக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கண்டனர். அதில் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். பொருட்களை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அபராதமும் விதிக்கப்பட்டது. மஞ்சள் பைகளை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.