/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அம்மன்பட்டியில் மஞ்சுவிரட்டு 10 பேர் காயம்
/
அம்மன்பட்டியில் மஞ்சுவிரட்டு 10 பேர் காயம்
ADDED : மே 30, 2024 03:06 AM
நரிக்குடி: நரிக்குடி அம்மன்பட்டியில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.
நரிக்குடி அம்மன்பட்டியில் காளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 12க்கு மேற்பட்ட காளைகள் வந்தன.
காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி வரை நடந்தது. 125க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 9 வீரர்கள். 20 நிமிடங்கள் வரை போட்டியில் இருப்பர். சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.
வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் சுழல் கோப்பைகள், ரொக்கப் பரிசு, வெள்ளி காசுகள், கட்டில், சில்வர் அண்டா, பிளாஸ்டிக் சேர், சில்வர் குடம், பிரஷர் குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கண்டு களித்தனர். திருச்சுழி டி.எஸ்.பி., ஜெகநாதன் தலைமையில் 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.