ADDED : ஜூன் 22, 2024 01:54 AM
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரே நாளில் 10 பேரை தெரு நாய் கடித்ததில் காயமடைந்தனர்.
அருப்புக்கோட்டையின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக திரிகின்றன.
நேற்று ஜவகர் சங்கம், டெலிபோன் ரோடு, பஜார் பகுதிகளில் சுற்றி திரிந்த தெரு நாய் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த முனியசாமி 39, வடுகர் கோட்டையைச் சேர்ந்த பெருமாள் 58, சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி76, சதாசிவம் 61, அண்ணாமலை நகரை சேர்ந்த கஸ்தூரி 6, வீரபாண்டியன் 16, திவாகர் 18, கிழக்குத் தெருவை சேர்ந்த மாரிமுத்து 43, சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் 26, உட்பட பத்துக்கு மேற்பட்டோரை கடித்ததில் காயமடைந்த அவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.