/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் நீர்வரத்து ஓடையில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

ADDED : ஆக 29, 2024 04:41 AM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் நீர் வரத்து ஓடைகளில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் காந்தி ரோடு, விஸ்வநத்தம் ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது அப்பகுதியில் இருந்த நீர்வரத்து ஓடையில் உணவு கழிவுகள், பழக் கழிவுகள்பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரிக்கையில், ஓடைக்கு அருகில் உள்ள ஓட்டல், பழக்கடையிலிருந்து கழிவுகள்ஓடையில் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2020ன் கீழ் ஓட்டல், பழக்கடைக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கமிஷனர் கூறுகையில், மக்கள், வணிகர்கள் தினசரி உருவாகும் கழிவுகளை வீடு தேடி வரும் துாய்மை பணியாளர்கள் மற்றும் வாகனங்களில் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும்.
பொது இடங்களிலோ, தெருமுனைகளிலோ நீர் வரத்து ஓடைகள், சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை கொட்ட கூடாது.மீறினால் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும், சுகாதார அதிகாரிகள் இப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருவர், என்றார்.