/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
10 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்க தகுதியற்றவை சி.ஐ.டி.யூ., மாநிலத் தலைவர் பேட்டி
/
10 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்க தகுதியற்றவை சி.ஐ.டி.யூ., மாநிலத் தலைவர் பேட்டி
10 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்க தகுதியற்றவை சி.ஐ.டி.யூ., மாநிலத் தலைவர் பேட்டி
10 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்க தகுதியற்றவை சி.ஐ.டி.யூ., மாநிலத் தலைவர் பேட்டி
ADDED : ஜூலை 09, 2024 09:03 PM
விருதுநகர்:தமிழகத்தில் 10 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்க தகுதியற்ற நிலையில் இருந்தும் தொடர்ந்து இயக்கப்படுவதாக சி.ஐ.டி.யூ., மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.
விருதுநகரில் அவர் மேலும் கூறியதாவது:
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த முறையில் பஸ்கள், டிரைவர், நடத்துனர்களை நியமிப்பது அரசின் கொள்கை என கூறுவது தவறு. அமைச்சர்கள், அதிகாரிகள் சிபாரிசுகளில் வந்த ஒப்பந்த பணியாளர்களை சில ஆண்டுகளுக்கு பின் ஒரு வேளை பணிநிரந்தம் செய்தால் இட ஒதுக்கீடு முற்றிலும் அழிந்து விடும்.
தமிழகத்தில் இயக்க தகுதியற்ற நிலையிலும் பத்தாயிரம் அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இவை படிப்படியாக மாற்றப்படும் என சட்டசபையில் அமைச்சர் தெரிவித்திருந்தாலும், இயக்குவதால் மக்களுக்கான பாதிப்புகள் அதிகரித்துள்ளது.
நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் பணப்பலன்களை ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்க அரசு மறுக்கிறது. ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு கடந்த 19 மாதங்களாக உரிய பணப்பலன்கள் கொடுக்கப்படவில்லை. பென்ஷன் பெறுபவர்களுக்கு 9 ஆண்டுகளாக பஞ்சப்படி உயர்வு வழங்கவில்லை. தொழிலாளர்களிடம் பிடித்த பி.எப்., சொசைட்டி, எல்.ஐ.சி., பணம் ரூ. 15 ஆயிரம் கோடியை நிர்வாகம் செலவழித்து விட்டது.
அரசு போக்குவரத்து கழகத்தில் வரவுக்கும் செலவுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசத்தை மாதந்தோறும் தமிழக அரசு ஈடுகட்ட வேண்டும். புதிய வழித்தடங்களில் இயக்க உள்ள மினி பஸ்களை தனியாருக்கு கொடுக்காமல் அரசு ஏற்று நடத்த வேண்டும், என்றார்.