/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை சுற்றி 100 மீ.,க்கு பட்டாசு, மேளதாளத்துக்கு தடை
/
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை சுற்றி 100 மீ.,க்கு பட்டாசு, மேளதாளத்துக்கு தடை
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை சுற்றி 100 மீ.,க்கு பட்டாசு, மேளதாளத்துக்கு தடை
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனை சுற்றி 100 மீ.,க்கு பட்டாசு, மேளதாளத்துக்கு தடை
ADDED : மே 06, 2024 12:24 AM
காரியாபட்டி : காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் சுற்றி 100 மீட்டருக்கு பட்டாசு வெடிக்க, மேளதாளம் முழங்க வனத்துறை தடை விதித்துள்ளது.
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஆலமரத்தில் பழந்தின்னி வவ்வால்கள் தங்கி வருகின்றன. அப்பகுதி மக்கள், போலீசார்கள் பாதுகாத்து வந்தனர். வவ்வால்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக அப்பகுதியில் பட்டாசு, மேளதாளம், அதிக இரைச்சல் எழுப்புவதை தவிர்த்தனர்.
அதனால் 100 ஆண்டுகளைக் கடந்தும் அங்கு தங்கி வருகின்றன. சமீபகாலமாக திருவிழா, கட்சி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்கியதால் அங்கிருந்த வவ்வால்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தொடங்கின.
இதனை பாதுகாக்க வேண்டி சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கள ஆய்வு செய்த வனத்துறையினர் பழந்தின்னி வவ்வால்களின் புகலிடமாக ஆலமரம் இருந்து வருகிறது.
அங்கு வாழக்கூடிய வவ்வால்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு பட்டாசு வெடிக்கவோ, மேளதாளங்கள் முழங்கவோ, அதிக ஒலி எழுப்பவோ கூடாது என தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அப்பகுதியில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.