/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.1.10 லட்சம் திருட்டு
/
ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.1.10 லட்சம் திருட்டு
ADDED : ஆக 22, 2024 02:08 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முன்னாள் ராணுவ வீரரின்வீட்டில் ஏ.டி.எம் கார்டு திருடி ரூ.1.10லட்சத்தை திருடிய பால்பாண்டியை 24, போலீசார் கைது செய்தனர்.
சம்பந்தபுரம் தெருவை சேர்ந்த முன்னாள்ராணுவ வீரர் நாராயணசாமி மனைவி மாலதி 51,ஆசிரியர் காலனியில் தங்கியுள்ளார். இளைஞர் ஒருவர் மூலம் வீட்டை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.
இந்நிலையில் பாஸ் புக் மூலம் வங்கியில் கணக்கு சரிபார்த்த போது ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 500 குறைந்துள்ளது தெரிந்தது. தெற்கு போலீசில் புகாரின் பெயரில் வீட்டு வேலைக்கு வந்த இனாம் செட்டிகுளத்தை சேர்ந்த பால்பாண்டி 24, என்பவரிடம்விசாரித்ததில் ஏடிஎம்மூலம் பணத்தை திருடியது தெரிந்து அவரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.