/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதுகாப்பு பயிற்சிக்கு வராத 126 பட்டாசு ஆலை போர்மேன்கள்
/
பாதுகாப்பு பயிற்சிக்கு வராத 126 பட்டாசு ஆலை போர்மேன்கள்
பாதுகாப்பு பயிற்சிக்கு வராத 126 பட்டாசு ஆலை போர்மேன்கள்
பாதுகாப்பு பயிற்சிக்கு வராத 126 பட்டாசு ஆலை போர்மேன்கள்
ADDED : ஜூலை 04, 2024 12:51 AM
சிவகாசி: மாவட்டத்தில் 126 தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் மேலாளர்கள், போர்மேன்கள் பயிற்சியை எடுக்காமல் உள்ளனர். அந்நிறுவனங்கள்மீது இரு மடங்கு அபராதம்விதிக்க உள்ளதாக சிவகாசி தொழிலக பாதுகாப்பு மைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் மே 9ல் நடந்த வெடி விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் சாத்துார் பந்துவார்பட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மொத்தமாக கடந்த இரண்டு மாதங்களில் 16 தொழிலாளர்கள் வெடி விபத்துக்கு பலியாகி உள்ளனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் முதல் அனைவரும்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து சிவகாசியில் செயல்பட்டு வரும் தொழிலக பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பட்டாசு ஆலை மேலாளர்கள், போர்மேன்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சிகளில் பங்கேற்காத தொழிற்சாலைகளுக்கு ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் இரண்டாவது முறை பங்கேற்காத ஆலைகளுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜனவரி மாத கடைசியில் பயிற்சி பெறாமல் இருந்த 380 தொழிற்சாலைகளில், 126 தொழிற்சாலைகள் பயிற்சிக்கு போர்மென்களை அனுப்பாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் ஜூன் மாதம் 70 தொழிற்சாலைகளில் பணிபுரியும் போர்மேன்கள் தலா ரூ. 5000 என 3,50,000 அபராதம் செலுத்தி பயிற்சியை முடித்துள்ளனர்.
இரண்டாவது கட்டமாக ஜூலை 1 முதல் பட்டாசுதொழிற்சாலைகளில் பயிற்சியை முடிக்காத போர்மேன்களுக்கு இரு மடங்காக ரூ. 10 ஆயிரம் அபராதமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது வரை இரண்டு பட்டாசு ஆலைகள் மட்டும் ரூ. 10 ஆயிரம் செலுத்தி பயிற்சி பெற்று வருகின்றனர்.
இது குறித்து தொழிலக பாதுகாப்பு மைய இயக்குனர் ராமமூர்த்தி கூறுகையில், பயிற்சி வகுப்பில் பங்கேற்காத தொழிற்சாலைகள் தொழிலாளர்களை பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்.
ஜூலை 10ல் கலெக்டர்தலைமையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம்நடைபெற உள்ளது, என்றார்.