sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வரதட்சணை கொடுமை:13 பேர் மீது வழக்கு

/

வரதட்சணை கொடுமை:13 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை:13 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை:13 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 15, 2011 10:00 PM

Google News

ADDED : ஜூலை 15, 2011 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய, கணவன் மற்றும் குடும்பத்தார் 13 பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

விருதுநகர் சங்கரன் கிணற்று தெருவை சேர்ந்தவர் சாகிராபானு(41). இவருக்கும் தர்காஸ் தெருவை சேர்ந்த முகமதுரபீக் என்பவருக்கும் 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 50 பவுன் நகை, 3 லட்சம் பணமும் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த 40 நாளில் முகமதுரபீக், ரியாத் சென்று விட்டார். அதன் பின் வீடு வாங்க 30 லட்சம் பணம் வேண்டும் என சகிராபானுவை, அவருடைய தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்ததில் அவரும் 75 பவுன் நகை வாங்கி வந்துள்ளார். இதை முகமதுரபீக் மற்றும் குடும்பத்தினர் விற்று அந்த பணத்தில் பாளையங்கோட்டையில் வீடு வாங்கினர். இந்நிலையில், மீண்டும் 10 லட்சம் பணம் வாங்கி வர வற்புறுத்தினர். இல்லையென்றால், முகமதுரபீக்குக்கும் பர்கீஸ்பேகம் என்பவருக்கும் தொடர்பு இருப்பதால், அவரையே திருமணம் செய்து வைக்க போவதாக சாகிராபானுவை மிரட்டினர். விருதுநகர் ஜே.எம். 2 கோர்டில் சாகிராபானு மனு செய்தார். கோர்ட் உத்தரவுபடி முகமது ரபீக், அலிபாத்திமா, முகமது நாசர், காதர்பீபி, சம்மத் நிஷாபேகம், சென்னை சகிரா பானு, அசாருதீன், பர்கீஸ் பேகம் உட்பட 13@பர் மீது விருதுநகர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us