/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாசில்தார் உட்பட மூவருக்கு 17பி
/
தாசில்தார் உட்பட மூவருக்கு 17பி
ADDED : மார் 03, 2025 07:17 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் கண்மாயில் நடந்த கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறிய விவகாரத்தில் சிறப்பு டி.ஆர்.ஓ., ஆனந்தி சமர்பித்த அறிக்கையின்படி தாசில்தார் ராமநாதன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் அனிதா, உதவி வேளாண் அலுவலர் முத்துக்குரு ஆகியோருக்கு '17 (பி)' குற்றக்குறிப்பாணை வழங்கி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் கண்மாயில் 500 கியூபிக் மீட்டர் வண்டல் மண் அள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் 5000 கியூபிக் மீட்டர் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சாத்துார் தாசில்தார் ராமநாதன் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதில் ஏற்கனவே துணை தாசில்தார் நவநீதன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வி.ஏ.ஓ., அஜிதா, கிராம உதவியாளர் குருசாமி ஆகிய 4 பேருக்கு '17 (ஏ)' பிரிவின் கீழ் குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று டி.ஆர்.ஓ., அறிக்கையின் படி, தாசில்தார் ராமநாதன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் அனிதா, உதவி வேளாண் அலுவலர் முத்துக்குரு ஆகியோருக்கு '17 (பி)' பிரிவின் கீழ் குற்றக்குறிப்பாணை வழங்கி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.