sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருச்சுழி ரோட்டில் 18 வேகத் தடைகள்; அலறும் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகள்

/

திருச்சுழி ரோட்டில் 18 வேகத் தடைகள்; அலறும் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகள்

திருச்சுழி ரோட்டில் 18 வேகத் தடைகள்; அலறும் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகள்

திருச்சுழி ரோட்டில் 18 வேகத் தடைகள்; அலறும் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகள்


ADDED : ஜூலை 02, 2024 06:23 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை- திருச்சுழி ரோட்டில் ஏகப்பட்ட வேகத்தடைகள் இருப்பதால் அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ்சில் வரும் நோயாளிகள் வாகனம் குதித்துச் செல்வதால் வலியால் அலறுகின்றனர்.

அருப்புக்கோட்டை - - திருச்சுழி ரோடு வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த ரோட்டில் தான் 5 க்கும் மேற்பட்ட நூற்பாலைகள், தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் திருச்சுழி, நரிக்குடி ராமேஸ்வரம் உட்பட ஊர்களுக்கு செல்வர். 2 கி.மீ., தூரமுள்ள இந்த ரோட்டில், தேவாங்கர் கலை கல்லூரியிலிருந்து ராமலிங்கா மில் வரை சுமார் 18 வேக தடைகள் (ரம்பிள் ஸ்டிரிப்) வெள்ளை கலரில் பட்டையாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் 4 பட்டைகள் போடப்பட்டு இருக்கும்.

இதனால் வாகனங்கள் குதித்துக் கொண்டே செல்லும். ஸ்பீடு பிரேக்கர்கள் போட்டால் வாகனங்கள் ஏறி இறங்கிச் செல்வதில் சிரமமாக இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை புதிய முறையில் தெர்மோ பிளாஸ்டிக் பெயிண்டை பயன்படுத்தி சிறிய வேகத்தடை அமைத்துள்ளனர்.

ரோட்டில் விபத்து ஏற்படும் பகுதியில் மட்டும் போடுவதை விட்டுவிட்டு பல இடங்களில் இவற்றை போட்டுள்ளதால் வாகனங்கள் குதித்து செல்கின்றன.

திருச்சுழி, நரிக்குடி மற்றும் புறநகர் பகுதியில் விபத்துக்குள்ளானவர்களை 108 ஆம்புலன்ஸில் இந்த ரோடு வழியாக கொண்டு வரும்போது குதித்துக் கொண்டே செல்கிறது. ஏற்கனவே விபத்துக்குள்ளாகி வலியால் துடித்துக் கொண்டிருப்பவர்கள் வேகத்தடையில் குதித்து செல்வதால் வலி அதிகமாகி அலறுகின்றனர். டூவீலர் ஓட்டுபவர்களும் சிரமப்படுகின்றனர்.

நெடுஞ்சாலை துறை இதை கருத்தில் கொண்டு முக்கியமான இடங்களில் மட்டும் ரம்பிள் ஸ்டிரிப்புகளை விட்டு விட்டு, மற்ற பகுதிகளில் இருப்பதை அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us