ADDED : ஏப் 17, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து விருதுநகர் வங்கிகளுக்கு வழங்க தனியார் நிறுவன ஊழியர்கள் பாதுகாப்புடன் வேனில் பணத்தை எடுத்து வந்தனர்.
சந்திரகிரிபுரம் அருகே நேற்றிரவு 6:30 மணிக்கு வேனை தேர்தல் பறக்கும் படை அலுவலர் பொன்னுசாமி, எஸ்.எஸ்.ஐ., கல்விச்செல்வன், போலீசார் முத்துலட்சுமி, மீனா, மகேந்திரன் ஆகியோர் சோதனையிட்டனர். வேனிலிருந்த ரூ.1.92 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் விருதுநகர் தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர். பணத்திற்கான ஆவணங்களை தனியார் நிறுவன ஊழியர்கள் வழங்கினர். இதையடுத்து பணத்தை திரும்ப ஒப்படைத்து வேனில் கொண்டு செல்ல அனுமதித்தனர்.

