/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாலைகளை சீரமைக்காததை கண்டித்து ராஜபாளையத்தில் 2 நாள் கடையடைப்பு
/
சாலைகளை சீரமைக்காததை கண்டித்து ராஜபாளையத்தில் 2 நாள் கடையடைப்பு
சாலைகளை சீரமைக்காததை கண்டித்து ராஜபாளையத்தில் 2 நாள் கடையடைப்பு
சாலைகளை சீரமைக்காததை கண்டித்து ராஜபாளையத்தில் 2 நாள் கடையடைப்பு
ADDED : மே 28, 2024 06:17 AM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் சாலைகள் ஆண்டுக்கணக்கில் சீரமைக்காததை கண்டித்து இரண்டு நாள் முழு கடையடைப்பு நடத்த வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.
ராஜபாளையம் நகர் பகுதி வழியே செல்லும் திருமங்கலம்- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வருடங்களுக்கு முன் மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்டது. இச்சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்காலிக பணிகள் மட்டும் நடந்ததால் பஞ்சு மார்க்கெட்டிலிருந்து மாரியம்மன் கோயில் வரை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தொடர் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை சாலையை சீரமைக்க கோரி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் ,இணை சங்கங்கள் சார்பில் துணை தலைவர் பத்மநாபன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மே. 31 காலை 6:00 மணி முதல் ஜூன் 1 மாலை 6:00 மணி வரை முழு கடை அடைப்பு நடத்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.