/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வயதான தம்பதியை தாக்கிய 2 கொள்ளையர்கள்
/
வயதான தம்பதியை தாக்கிய 2 கொள்ளையர்கள்
ADDED : மே 17, 2024 01:20 AM

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே வயதான தம்பதியை 2 பேர் தாக்கி அலைபேசியை பறித்து சென்றனர்.
அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் வடக்குபட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 79. அந்தமானில் எஸ்.ஐ., யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி சுமித்ரா 64. பாலவநத்தத்தில் வசிக்கின்றனர்.
நேற்று மாலை 5.30 மணிக்கு இவரது வீட்டிற்குள் வந்த மர்ம நபர்கள் கணவன், மனைவியை கத்தியால் தாக்கி பணம், நகையை கேட்டு மிரட்டினர். தம்பதியின் அலறல் சத்தம் கேட்டு மாடியிலிருந்து அவரது மகன் வருவதை பார்த்த கொள்ளையர்கள் பன்னீர்செல்வத்திடமிருந்த அலைபேசியை மட்டும் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். காயமடைந்த இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

