/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டா வழங்க 2 ஆண்டுகள் தாமதம்பெற்றுத் தந்த சட்டப் பணிகள் குழு
/
பட்டா வழங்க 2 ஆண்டுகள் தாமதம்பெற்றுத் தந்த சட்டப் பணிகள் குழு
பட்டா வழங்க 2 ஆண்டுகள் தாமதம்பெற்றுத் தந்த சட்டப் பணிகள் குழு
பட்டா வழங்க 2 ஆண்டுகள் தாமதம்பெற்றுத் தந்த சட்டப் பணிகள் குழு
ADDED : செப் 05, 2024 04:22 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : தந்தையிடம் இருந்து கிரயம் பெற்ற வீட்டிற்கு பட்டா பெற விண்ணப்பித்து 2 ஆண்டாகியும் வழங்கப்படாத நிலையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நடவடிக்கையால் உடனடியாக விண்ணப்பதாரருக்கு பட்டா வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அனுசுயா. இவர் தனது தந்தையிடமிருந்து கிரயம் பெற்ற வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி வருவாய் துறையில் மனு கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில்அனுசுயா மனு செய்திருந்தார். இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சட்டப்பணிகள் ஆணை குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்
இதனையடுத்து ஆனைக்குழு செயலாளர் தலைமை குற்றவியல் நீதிபதி பிரீத்தா வருவாய்த்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதனையடுத்து வருவாய் துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து பட்டா பெயர் மாற்றம் செய்த நகலை, சட்டப்பணிகள் ஆணைக்குழுவில்தாக்கல் செய்தனர்.
இதனை மனு செய்த அனுசுயாவிடம் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் நேற்று வழங்கினார். சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் உடனிருந்தனர்.