/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் 22 டன் பேரியம் நைட்ரேட் பறிமுதல்
/
சிவகாசியில் 22 டன் பேரியம் நைட்ரேட் பறிமுதல்
ADDED : ஜூலை 04, 2024 02:42 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியில் 22 டன் பேரியம் நைட்ரேட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள், சட்டவிரோத உற்பத்தி, தடை செய்யப்பட்ட வெடிபொருள் பயன்பாடு குறித்து பட்டாசு, தீப்பெட்டி தொழில் தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான குழுவினர் தொடர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இக்குழுவினர் சிவகாசி காமாக் நகரை சேர்ந்த மகேந்திரனுக்கு சொந்தமாக தாயில்பட்டியில் உள்ள பட்டாசு அட்டை குழாய் நிறுவனத்தில் சோதனை செய்த போது 455 மூடைகளில் 22 டன் பேரியம் நைட்ரேட் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
பேரியம் நைட்ரேட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரிக்க மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறைக்கு (பெசோ) பரிந்துரை செய்தனர்.
வெம்பக்கோட்டை போலீசார் மகேந்திரன் மீது வெடிபொருள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பட்டாசு தயாரிக்க பேரியம் நைட் பயன்படுத்தக் கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்ஒரே இடத்தில் 22 டன் பேரியம் நைட்ரேட் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.