/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
283 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி
/
283 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி
ADDED : ஜூலை 03, 2024 05:33 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 283 நீர்நிலைகளில் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வத்திராயிருப்பில் 49, சிவகாசியில் 11, ராஜபாளையம் 44, காரியாபட்டி 16, திருச்சுழி 47, விருதுநகர் 13, சாத்துார் 28, ஸ்ரீவில்லிபுத்துார் 46, அருப்புக்கோட்டை 17, வெம்பக்கோட்டை 12, என 283 நீர் நிலைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
வண்டல் மண், களிமண் தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் தாசில்தார்களிடம் அனுமதி பெறலாம்.
விண்ணப்பிப்போர் தங்களது நில ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.
நஞ்சை நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது ஒரு எக்டேருக்கு 185 கன மீட்டர் அளவிலும், புஞ்சை நிலத்திற்கு 2ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது ஒரு ஹெக்டேருக்கு 222 கன மீட்டர் அளவிலும், மண்பாண்டம் தயாரிக்க 60 கன மீட்டர் அளவிலும், சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர் அளவிலும் கட்டணமில்லாமல் எடுத்துக்கொள்ளலாம்.
மண் எடுப்பதை கண்காணிக்க மாவட்ட அளவில் துணை கலெக்டர் நிலையில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ், தாசில்தார் நிலையில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மண் எடுக்க அனுமதி பெற்று முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.