/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நகை மோசடி வழக்கு 3 ஆண்டு ஜெயில்
/
நகை மோசடி வழக்கு 3 ஆண்டு ஜெயில்
ADDED : ஏப் 27, 2024 03:54 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகை மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், 31 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டையில் மணி கோல்ட் லோன் நிறுவனத்தில் திரு விருந்தாள்புரத்தை சேர்ந்த மாரிமுத்து பணியாற்றி வந்தார்.
இந்நிறுவனத்தில் நகைகளை அடமானம் வைத்தவர்கள் பணத்தைச் செலுத்தி நகையை திரும்ப கேட்டவர்களுக்கு நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இவர் வாடிக்கையாளர்களின் நகைகளை வேறொரு இடத்தில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். இது தெரிந்து நகையை அடமான வைத்தவர்கள் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.
இந்த வழக்கு அருப்புக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி முத்துஇசக்கி, நிறுவன பணியாளர் மாரிமுத்துவிற்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், 31 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

