/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் 172 இடங்களில் 315 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
/
மாவட்டத்தில் 172 இடங்களில் 315 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
மாவட்டத்தில் 172 இடங்களில் 315 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
மாவட்டத்தில் 172 இடங்களில் 315 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
ADDED : செப் 07, 2024 05:01 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் 172 இடங்களில் 315 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,என விருதுநகர் எஸ். பி. கண்ணன் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சப் டிவிஷனுக்குட்பட்டநத்தம் பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷன்களில் நேற்று முன் தினம் இரவுவிருதுநகர் எஸ்.பி. கண்ணன் ஆய்வு செய்தார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து ஹிந்து , முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது; மாவட்டத்தில் 172 இடங்களில் 315 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் ஒரு ஏ.டி.எஸ்.பி, 12 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து பகுதிகளிலும் கஞ்சா, குட்கா உட்பட பல்வேறு போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் சமூக விரோத செயல்கள் நடந்தால் என்னுடைய அலைபேசி எண்ணான 99402 77199 என்ற எண்ணிற்கு 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து போலீஸ்காரர்களுக்கும் முறையாக வார விடுமுறை அளிக்கப்படுகிறது. -என்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி ராஜா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள், தனிப்பிரிவு போலீசார் உடன் இருந்தனர்.