/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
353 டெங்கு மஸ்துார்கள் பணிநீக்கம் அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
/
353 டெங்கு மஸ்துார்கள் பணிநீக்கம் அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
353 டெங்கு மஸ்துார்கள் பணிநீக்கம் அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
353 டெங்கு மஸ்துார்கள் பணிநீக்கம் அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
ADDED : மே 04, 2024 04:35 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க., ஒன்றிய குழு தலைவர்களின் அழுத்தத்தால் 353 டெங்கு மஸ்துார்களை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவஞானம், செயலாளர் வைரவன் அறிக்கை: 2014ல் அ.தி.மு.க., ஆட்சியில் ராஜபாளையத்தில் டெங்கு பாதிப்பால் 23 குழந்தைகள் இறந்தன.
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்ததால் பிற மாவட்டங்களை விட கூடுதல் எண்ணிக்கையில் மஸ்தூர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு சம்பளம் வழங்க ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து மாதத்திற்கு ரூ 2.5 லட்சம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் ஆட்சி மாறியபின் தற்போதுள்ள தி.மு.க., ஒன்றிய தலைவர்கள் இந்த நிதி ஒதுக்கீட்டை நஷ்டமாக பார்க்கின்றனர். மஸ்துார்கள் எண்ணிக்கையை குறைக்கின்றனர். 573 பணியாற்றிய இடத்தில் 285ஆக குறைக்கப்பட்டது.
ஆட்குறைப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்பு 573 பேருக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வேலை வழங்குவது என கலெக்டர் முடிவு செய்தார். ஆனால் ஒன்றிய தலைவர்கள் தொடர் நெருக்கடியால் 2024 மார்ச் மாதம் 10 நாட்கள் மட்டும் பணி வழங்கப்பட்டது.
ஏப்ரலில் ஒன்றியத்திற்கு 20 பேருக்கு மட்டும் பணி வழங்க முயற்சி நடந்தது. தேர்தல் காலம் என்பதால் ஒத்திவைக்கப்பட்டது.
மே மாதம் ஒன்றியத்திற்கு 20 பேருக்கு வேலை என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 573 பேரில் 220 பேரை தேர்வு செய்யும்போது அரசியல் தலையீடும் பணம் பேரமும் நடக்கும். நோய் தடுப்பு பணியும் பாதிக்கப்படும்.
எனவே மஸ்துார்களுக்கு வழங்கும் ஊதியத்தை தேவையற்ற செலவாக பார்க்காமல், தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் பணி என்பதை புரிந்து கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஒன்றி யத்திற்கும் எவ்வளவு டெங்கு மஸ்துார் இருக்க வேண்டும் என ஊரகவளர்ச்சித்துறை இயக்குனரிடம் இருந்து வந்துள்ள கடிதத்தின் அடிப்படையில் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் குறைத்து விட்டதாக கூறுவது தவறான தகவல்.
நோயின் தாக்கம் கூடுதலாக இருந்தால் அதை கட்டுப்படுத்த கூடுதல் டெங்கு மஸ்துார்கள் தேவையிருந்தால் மாவட்ட நிர்வாகம் மீண்டும் நியமிக்கவும் செய்யும், என தெரிவித்தனர்.