/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் பறிமுதல்
/
ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் பறிமுதல்
ADDED : மார் 25, 2024 06:32 AM
சிவகாசி, சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சபரி குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டூவீலரில் வந்த சிவகாசியை சேர்ந்த சந்திரசேகரனை, சோதனை செய்கையில் அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ. 2 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதேபோல் உரிய ஆவணங்கள் இன்றி ராமதாஸ் என்பவர் ரூ. 67 ஆயிரம் வைத்திருந்தார். அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
*திருச்சுழி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜாராம் தலைமையில் குழுவினர் அருப்புக்கோட்டை - திருச்சுழி ரோட்டில் வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்ததில் ஆவணங்கள் இன்றி ரூ. 2 லட்சத்து 4 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது, விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஆத்திப்பட்டி அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியை சேர்ந்த ஆடு வியாபாரி கதிர்வேல்,38, திருச்சுழி அருகே முத்தநேரியில் ஆடு வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றது தெரிய வந்தது.
பறிமுதல் செய்த பணத்தை திருச்சுழி தாசில்தாரிடம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

