/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
/
திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
ADDED : ஜூலை 17, 2024 12:12 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயின் பறிப்பு, டூவீலர் திருட்டுகளில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை பந்தல்குடி சுற்றியுள்ள பகுதிகளில் டூவீலர்கள் திருட்டு, நகர் பகுதியில் வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தவர்களின் செயின், அலைபேசி பறிப்பு உட்பட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அருப்புக்கோட்டை டவுன், தாலுகா, பந்தல்குடி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட ஆத்திப்பட்டியை சேர்ந்த கதிரேசன்,19, ராஜீவ் நகரை சேர்ந்த நேதாஜி,24, சதீஸ், 24, செம்பட்டி என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த தனுஸ், 19, மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட ஆறு பேர்கள் இணைந்து செயல்பட்டது தெரிய வந்தது. இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 4 பைக் , 2 அலைபேசிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.