/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்த 5 பேர் கைது
/
காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்த 5 பேர் கைது
ADDED : செப் 03, 2024 04:37 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ; ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு, மம்சாபுரம், ராக்காச்சி அம்மன் கோவில் மலை அடிவாரப் பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் வைத்து காட்டுப்பன்றிகள் அடிக்கடி வேட்டையாடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு மம்சாபுரம் ஒற்றன்குளம் கண்மாய் பகுதியில் ஐந்து பேர் கொண்ட கும்பல் காட்டுப்பன்றி கறியை வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், மம்சாபுரத்தைச் சேர்ந்த சுந்தர் 29, பால்ராஜ் 56, ஆனந்தகுமார் 28, தர்மராஜ் 43, ராஜபாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் 34 என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த வனத்துறையினர் தலா ரூ 20 ஆயிரம் அபராதம் விதித்ததனர்.