/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பைக்கில் வைத்திருந்த ரூ.5.50 லட்சம் மாயம்
/
பைக்கில் வைத்திருந்த ரூ.5.50 லட்சம் மாயம்
ADDED : மே 04, 2024 04:31 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் வங்கியில் பணத்தை எடுத்து பைக்கில் வைத்து கொண்டு சென்ற ரூ.5.50 லட்சம் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை மணி நகரம் சண்முகநாதபுரத்தை சேர்ந்தவர் கணேசன், 39, இவர் நகைகளை இந்தியன் வங்கியில் அடகு வைத்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு அதை தனது பைக் டேங்க் கவரிங் வைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வழியில் சத்தியமூர்த்தி பஜார் பகுதியில் உள்ள மருந்து கடை முன்பு நிறுத்தி மருந்து வாங்கி விட்டு திரும்ப வந்து பைக்கை பார்த்தபோது பைக்கில் வைத்திருந்த பணம் மாயமானது.
டவுன் போலீசார் அந்தப் பகுதி சிசிடிவி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். - -