/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை போர்மேன்களை பயிற்சிக்கு அனுப்பாத 57 தொழிற்சாலைகளுக்கு அபராதம்

ADDED : ஜூன் 22, 2024 04:42 AM
சிவகாசி: சிவகாசியில் உள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் மேலாளர்கள், போர்மேன்களை பயிற்சிக்கு அனுப்பாத 57 தொழிற்சாலைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி ஆனையூரிலுள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் ஒவ்வொரு வாரமும் 35 ஆலைகளில் பணிபுரியும் மேலாளர்கள் போர்ன்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்புவழங்கப்படுகிறது.
ஏற்கனவே இரு மாதத்தில் 43 தொழிற்சாலைகளில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.
எனவே அந்த 43 தொழிற்சாலைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தொழிலக பாதுகாப்பு சுகாதாரம் பயிற்சி மையம் இணை இயக்குனர் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தற்போது வரை 57 ஆலைகளிலிருந்து யாரும் பயிற்சியில் பங்கேற்கவில்லை. பங்கேற்காத 57 ஆலைகளுக்கும் தலா ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டது.
தொழிலக பாதுகாப்பு சுகாதாரம் பயிற்சி மையம் இணை இயக்குனர் கூறுகையில், முதல் முறை பயிற்சியில் பங்கு பெறாத ஆலைகளுக்கு தலா ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு ஜூலை 1 முதல் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்,என்றார்.