/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புகையிலை விற்பனை செய்த 6 பேர் கைது
/
புகையிலை விற்பனை செய்த 6 பேர் கைது
ADDED : ஆக 27, 2024 06:13 AM
காரியாபட்டி : காரியாபட்டி பி.புதுப்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பாலசந்திரன் 38, தாயார் தனபாக்கியம், மனைவி சாந்தி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., அசோக்குமார் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். பாலச்சந்திரனின் பலசரக்கு கடையில் புகையிலை இருப்பது தெரிந்தது. மேலும் வீடு, காட்டுப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரத்து 475 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பாலச்சந்திரன் , தாயார் தனபாக்கியம், மனைவி சாந்தியை கைது செய்து விசாரித்ததில், மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரனிடம் ஆர்டர் கொடுப்பதாக தெரிவித்தனர்.
ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து விசாரித்ததில், பெங்களூரில் உள்ள கம்பெனியில் மொத்தமாக ஆர்டர் கொடுத்து மதுரை, விருதுநகர், சிவகங்கை பகுதி கடைகளுக்கு புகையிலை சப்ளை செய்வதாக தெரிவித்தார். அவர் பண்ணை மூன்றடைப்பைச் சேர்ந்த சரவணபகவான், சின்ன செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த சந்தனராஜ் ஆகியோருக்கு விற்பனை செய்வதாக கூறியதால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
விற்பனைக்கு பயன்படுத்திய 3 சக்கர வாகனம், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. 7 மாதங்களுக்கு முன் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பாலச்சந்திரனின் கடை, வீடு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.