/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டி.எஸ்.பி.,யை தாக்கிய 7 பேர் சிறையில் அடைப்பு * 116 பேர் மீது வழக்கு பதிவு

ADDED : செப் 05, 2024 02:16 AM

அருப்புக்கோட்டை:ராமநாதபுரம் மாவட்டம், பெருமாள் தேவன்பட்டியைச் சேர்ந்த லோடு வேன் டிரைவர் ளிக்குமார், 33, என்பவரை, கடந்த 2 அன்று பைக்கில் வந்த நபர்கள் இவரை வெட்டி கொலை செய்தனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று முன்தினம் சாலை மறியலில் சிலர் ஈடுபட முயன்றனர். பெண் டி.எஸ்.பி., காயத்ரி அவர்களை தடுத்தபோது, தலைமுடியை பிடித்து இழுத்து சிலர் தாக்கினர்.
இந்த வழக்கில் கமுதி அருகே நெல்லிக்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன், 30, என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த 23 - 24 வயதுடைய ஏழு பேரை, அருப்புக்கோட்டை டவுன் போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர். மேலும், சாலை மறியல் செய்த 116 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.