ADDED : மார் 26, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி கருமன் கோயில் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வந்த ராஜதுரை நகரைச் சேர்ந்த மலை முருகனை, சோதனை செய்கையில் அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ. 7 லட்சத்து 29 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
*நரிக்குடி பகுதியில் தேர்தல் அலுவலர் நாகராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலை காரை நிறுத்தி சோதனை செய்ததில் மதுரை எல்லிஸ் நகரைச் சேர்ந்த ஆடு வியாபாரி துரைப்பாண்டி 54, வீரசோழனின் நடக்கும் வார சந்தையில் ஆடு வாங்க உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.72 ஆயிரத்து 400 ஐ பறிமுதல் செய்து, திருச்சுழி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

