/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கோடை மழை சிவகாசியில் 73.50 மி.மீ., பதிவு
/
மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கோடை மழை சிவகாசியில் 73.50 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கோடை மழை சிவகாசியில் 73.50 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கோடை மழை சிவகாசியில் 73.50 மி.மீ., பதிவு
ADDED : ஏப் 14, 2024 03:59 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை கோடை மழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக சிவகாசியில் 73.50 மி.மீ., மழையளவு பதிவானது.
விருதுநகரில் காலை முதலே மேகமூட்டத்துடன் வானிலை காணப்பட்டது. மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை மிதமான மழை பெய்தது. அதன் பின் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டன. பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, அக்ரஹாரம் தெரு, நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கி நீண்ட நேரம் கழித்து வடிந்தது.
சிவகாசியில் மாலை 5:30 மணியில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கோடை மழை வெளுத்தது. என்.ஆர்.கே.ஆர்., ரோடு, திருத்தங்கல் ரோடு, பழைய விருதுநகர் ரோடு நகர்ப்பகுதிகளில் தேங்கி வடிந்தது. காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் மாலை 6:20 மணி முதல் மழை பெய்ய துவங்கியது. சாத்துாரில் 3:30 மணி முதல் 4:30 மணி வரை லேசான சாரல், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் லேசான துாரல் பெய்தது. மாலை நேரங்களில் மின்னல், மேகமூட்டம் மட்டும் காணப்பட்டது.
நேற்று முன்தினம் காலை 8:00 மணியில் இருந்து நேற்று காலை 8:00 மணிவரையான மழையளவு மி.மீட்டரில் விருதுநகர் 20 ., காரியாபட்டி 38.40 ., ஸ்ரீவில்லிபுத்துார் 37, ராஜபாளையம் 18, சாத்துார் 27., வெம்பக்கோட்டை 40.60., வத்திராயிருப்பு 3.40, அதிகபட்சமாக சிவகாசியில் 73.50, மழை பதிவானது. தொடர்ந்து காட்டமான வெயிலால் வாடி வந்த மக்கள் குளிர்ந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

