/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பில் 84 மி.மீ. மழை; பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லை
/
வத்திராயிருப்பில் 84 மி.மீ. மழை; பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லை
வத்திராயிருப்பில் 84 மி.மீ. மழை; பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லை
வத்திராயிருப்பில் 84 மி.மீ. மழை; பெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லை
ADDED : மே 10, 2024 11:55 PM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் நேற்று முன்தினம் இரவு 84 மில்லி மீட்டர் மழை பெய்த போதிலும் பிளவக்கள் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளுக்கு போதிய அளவிற்கு தண்ணீர் வரத்து ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் இரவு 8: 45 மணி முதல் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடி, மின்னலுடன் ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், சுந்தரபாண்டியம், வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பஜார் வீதிகள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் மழை நீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். பெரிய மாரியம்மன் கோயில், உழவர் சந்தை, கீழ ரத வீதி சந்திப்பு உட்பட பல இடங்களில் மழைநீரும், கழிவுநீரும் பெருகெடுத்து ஓடியது.
வத்திராயிருப்பில் 84 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் முத்தாலம்மன் பஜார், பஸ் ஸ்டாண்ட் உட்பட பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பிளவக்கல் பெரியாறு அணை பகுதியில் 47.6 மில்லி மீட்டர் மழை பெய்தும் அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்படவில்லை. கோவிலாறு அணைப்பகுதியில் 98.4 மில்லி மீட்டர்மழை பெய்த நிலையில்அணைக்கு மிகவும் குறைந்த அளவே தண்ணீர் வரத்து காணப்பட்டது.
இரண்டு மாதமாக வெயிலின் தாக்கத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்த மக்கள் மழையின் காரணமாக குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.