/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராணுவக்கல்லுாரியில் 8ம் வகுப்பு தகுதித்தேர்வு
/
ராணுவக்கல்லுாரியில் 8ம் வகுப்பு தகுதித்தேர்வு
ADDED : மார் 03, 2025 06:44 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லுாரியில் 2026ம் ஆண்டிற்கான 8ம் வகுப்பு தகுதித்தேர்வு சேர்க்கை ஜூன் 1ல் நடக்கவுள்ளது.
விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை - 'கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட் -- -248 003'என்ற முகவரிக்கு வரைவோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லுாரியின், இணையவழியான www.rimc.gov.in மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வயது வரம்பு உண்டு. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், டி.என்.பி.எஸ்.சி., தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு மார்ச் 31க்குள் வந்து சேர வேண்டும், என்றார்.