/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
96.64 சதவீதம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி: முதலிடத்தில் இருந்து பின்தங்கி 5வது இடம்
/
96.64 சதவீதம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி: முதலிடத்தில் இருந்து பின்தங்கி 5வது இடம்
96.64 சதவீதம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி: முதலிடத்தில் இருந்து பின்தங்கி 5வது இடம்
96.64 சதவீதம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி: முதலிடத்தில் இருந்து பின்தங்கி 5வது இடம்
ADDED : மே 07, 2024 05:00 AM
ராமநாதபுரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1985ல் தனி மாவட்டமாக உருவானது முதல், ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்து வந்தது விருதுநகர் மாவட்டம்.
2013--14, 2015--16 ஆண்டுகளில் மட்டும் 3 வது இடம், 2019--20ல் 7வது இடம் 2020--21ல் 4வது இடம், 2021--22ல் 2வது இடம் பிடித்தது. இவை தவிர்த்து 27 முறை முதலிடம் பிடித்திருந்தது. கடந்த 2022--23 கல்வியாண்டில் 97.85 சதவீதம் எடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடம் பிடித்திருந்தது.
இந்த 2023--24ல் 9 ஆயிரத்து 743 மாணவர்கள், 11 ஆயிரத்து 534 மாணவிகள் என 21 ஆயிரத்து 277 மாணவர்கள் தேர்வெழுதியதில், 9 ஆயிரத்து 251 மாணவர்கள், 11 ஆயிரத்து 311 மாணவிகள் என 20ஆயிரத்து 562 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 94.95 சதவீதமும், அவர்களை விட 3.12 சதவீதம் கூடுதலாக மாணவிகள் 98.07 சதவீதமும் என தேர்ச்சி பெற்றனர்.
தமிழக அளவில் 96.64 தேர்ச்சி சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் 5வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் 1.21 சதவீதம் குறைவு. 2018 வரை அதிகபட்சமாக முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம் 2019--20ல் சறுக்கலை சந்தித்து 94.44 சதவீதம் தேர்ச்சி அடைந்து 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
அதன் பின் படிப்படியாக காமராஜர் பிறந்த மாவட்டம் என்ற பெருமையை கல்வியிலும் நிலைநாட்டி 2022--23ல் அதிக மதிப்பெண்கள், அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று மீண்டும் முதலிடம் பெற்றிருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் 5வது இடத்திற்கு பின்தங்கி உள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மன வேதனையில் உள்ளனர்.
முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி கூறியதாவது:
மெல்ல குற்கும் மாணவர்களுக்கு மெட்டீரியல்கள் கொடுக்கப்பட்டு தேவையான சிறப்பு கவனம் அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் எடுத்தனர். காலாண்டு, அரையாண்டு போன்ற விடுமுறை நாட்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
எதற்காக 5வது இடத்திற்கு பின்னடைவை சந்தித்தோம் என்பதை பள்ளி, பாட வாரியாக மதிப்பெண் விவரத்தை ஆய்வு செய்து, அதை சரி செய்ய வரும் கல்வியாண்டில் தேவையான முயற்சிகளை எடுப்போம்.
அடுத்த கல்வியாண்டில் துவக்கத்தில் இருந்தே முந்தைய கல்வியாண்டில் செய்த பிழைகளை செய்யாமல் இருப்போம். இது குறித்து குழு அமைக்கப்படும். தோல்வி அடைந்த மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். துணைத்தேர்வுகளில் இன்னும் அதிக மதிப்பெண் வாங்குவதற்கு வழிகாட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.