/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொங்கன்குளத்தில் கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது
/
கொங்கன்குளத்தில் கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது
கொங்கன்குளத்தில் கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது
கொங்கன்குளத்தில் கட்டப்பட்ட பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது
ADDED : செப் 11, 2024 12:19 AM

சிவகாசி : சிவகாசி அருகே கொங்கன்குளத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சிவகாசி அருகே கொங்கன் குளம்- திருவேங்கடபுரம் ரோட்டில் உள்ள தரைமட்டம் பாலம் கோடாங்கி பட்டி கண்மாயில் இருந்து வரும் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தினால் கிராமங்கள் துண்டிக்கப்படுவதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை தரைப்பாலங்கள் அனைத்தும் உயர்மட்ட பாலங்களாக அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கொங்கன்குளம் திருவேங்கடபுரம் ரோட்டில் இருந்த தரைமட்ட பாலம் உயர் மட்ட பாலமாக ரூ. ஒரு கோடி யில் கட்டும் பணிகள் துவங்கியது. தற்போது பாலம் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விருதுநகர் கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி , பாலம் பணிகள் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி காற்றில் சாய்ந்த மரங்களை அறுக்க தேவையான கருவிகள், வெள்ளத் தடுப்பு மீட்பு பணிக்கு போதுமான பொக்லைன் வாகனம், மணல் மூடைகள் தயார் நிலையில் உள்ளன. பாலங்கள், சிறு பாலங்கள் பழுது பார்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கனமழை பெய்தாலும் போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பு ஏற்படாமல் முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார்.