ADDED : மே 01, 2024 07:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஆமத்துார் அருகே பாவாளக்குறிச்சியில் கருடா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு பணி முடிந்து தொழிலாளர்கள் செல்லும் போது பட்டாசு தயாரிக்கும் அறையின் கதவை மூடினர். அப்போது ஏற்பட்ட உராய்வினால் தீ பிடித்தது. தீயணைப்புத் துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அசாம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.