/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்குவழிச்சாலை ஓரத்தின் புல்வெளியில் தீ; மரங்கள் பாதிப்பு
/
நான்குவழிச்சாலை ஓரத்தின் புல்வெளியில் தீ; மரங்கள் பாதிப்பு
நான்குவழிச்சாலை ஓரத்தின் புல்வெளியில் தீ; மரங்கள் பாதிப்பு
நான்குவழிச்சாலை ஓரத்தின் புல்வெளியில் தீ; மரங்கள் பாதிப்பு
ADDED : ஏப் 04, 2024 11:39 PM

விருதுநகர் : விருதுநகரில் நான்குவழிச்சாலையின் ஓரங்களில் உள்ள புல்வெளிகளுக்கு தீ வைப்பதால் பனை, வேப்ப மரங்கள் கருகி பாழாகும் நிலை அதிகரித்துள்ளது.
விருதுநகர் - சாத்துார் நான்கு வழிச்சாலை ஓரங்களில் புதிய மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இந்த மரங்கள் இன்னும் சில ஆண்டுகளில் நன்கு வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கும்.
இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் இனாம்ரெட்டியப்பட்டி விலக்கு அருகே உள்ள காய்ந்த செடி, புல்வெளிகளுக்கு சிலர் தீ வைத்து உள்ளனர்.
இந்த தீ புல்வெளிகளில் இருந்து அருகாமையில் புதியதாக நடவு செய்யப்பட்ட மரங்கள் கருகி பாழானது. இதன் அருகே இருந்த பனை மரங்களில் தீ பரவி அடிப்பகுதி எரிந்துள்ளது.
இது போன்று காய்ந்த புல்வெளிகளுக்கு தீ வைப்பவர்களால் நன்கு வளர்ந்த மரங்கள் பாழாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்படி ரோட்டின் அருகே தீயிட்டு கொளுத்துவதால் நடந்து, சைக்கிள்,டூவீலரில் செல்பவர்களுக்கு புகையால் சுவாசப்பிரச்னை, நுண்ணிய துகள்களால் கண் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே நான்குவழிச்சாலை அருகாமையில் உள்ள தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

