/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகால் கட்ட தோண்டப்பட்ட மண்ணால் இடையூறு ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து
/
வாறுகால் கட்ட தோண்டப்பட்ட மண்ணால் இடையூறு ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து
வாறுகால் கட்ட தோண்டப்பட்ட மண்ணால் இடையூறு ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து
வாறுகால் கட்ட தோண்டப்பட்ட மண்ணால் இடையூறு ரவுண்டானா இல்லாததால் அடிக்கடி நடக்கும் விபத்து
ADDED : ஏப் 21, 2024 03:56 AM

காரியாபட்டி: வாறுகால் கட்ட தோண்டப்பட்ட மண் ரோட்டோரங்களில் கொட்டப்பட்டு, பணி முடிந்தும் சரிவர அப்புறப்படுத்தாததால் இடையூறாக இருப்பது, முக்கு ரோட்டில் ரவுண்டானா இல்லாததால் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவது, 4 வழிச் சாலை கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் ஹைமாஸ் விளக்கு இல்லாததால் ரோட்டை கடக்க படாதபாடு படுவது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
காரியாபட்டி பேரூராட்சியில் கள்ளிக்குடி சாலையில் முக்கு ரோடு வரை வாறுகால் கட்டும் பணி நடைபெற்றது. அஸ்திவரம் தோண்டப்பட்ட மண் ரோட்டோரங்களில் கொட்டப்பட்டது. தற்போது பணி முடித்து கழிவு மண்ணை அப்புறப்படுத்தினர். சரிவர அப்புறப்படுத்தாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ரோட்டோர கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
முக்கு ரோட்டில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. முறையான பாதை அமைப்பு கிடையாது. 4 பக்கங்களிலிருந்தும் வரும் வாகன ஓட்டிகள் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டிச் செல்கின்றனர். ஒருவருக்கொருவர் முந்திச் செல்ல முற்படும் போது விபத்து ஏற்படுகிறது. அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பாதசாரிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
4 வழிச்சாலையில் கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் ஹைமாஸ் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் இருளாக இருப்பதால் ரோட்டை கடக்க சிரமமப்படுகின்றனர். கள்ளிக்குடி ரோடு, கே. செவல்பட்டியிலிருந்து பஜார் வரை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

